விமான நிலையத்தில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் நபரொருவர் கைது!

வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாக சிகரெட்டுகளை கொண்டு வந்த நபரொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியில் எடுத்துச் செல்ல முயன்ற போது  இன்று ஞாயிற்றுக்கிழமை (09) பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

துபாயில் வீடொன்றில் வீட்டுப் பணியாளராகப் பணிபுரிந்த  பலந்தோட்டை – ரம்புக்கனை பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய பெண்ணொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர்  துபாயிலிருந்து இலங்கை ஏர்லைன்ஸ் விமானம் UL-226 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு இன்று காலை 05.10 மணிக்கு வருகை தந்துள்ளார்.

கைது செய்யப்பட்ட பெண்ணின் பயணப்பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த  216,000 ரூபா மதிப்புடைய  14,400 “மன்செஸ்டர்” சிகரெட்டுகள் அடங்கிய 72 சிகரெட் கார்டூன்கள்  கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், பெண் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டு, எதிர்வரும் 13 ஆம் திகதி நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.