வெல்லம்பிட்டிய – வடுகொடவத்த பகுதியில் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக கூறப்படும் சிந்தா என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று சனிக்கிழமை (10) காலை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
சிந்தா என்பவர் பிறிதொரு நபர் ஒருவரைக் கொலை செய்வதற்காக துப்பாக்கி ஒன்றை வைத்திருந்ததாக வெல்லம்பிட்டிய பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் பொலிஸார் சோதனை நடத்திய போது, சந்தேகநபரிடமிருந்து பதினொரு கிராம் ஐஸ் போதைப் பொருளும் அவர் வைத்திருந்த துப்பாக்கியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.
இது குறித்து வெல்லம்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





