முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவு மீள பெறப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டு கருவாத்தோட்டம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் போராட்டம் ஒன்றை மேற்கொண்ட சம்பவத்துக்கு எதிரான வழக்கு ஒன்று தொடர்பில் நீதிமன்றில் ஆஜராகாமல் இருந்த குற்றத்திற்காக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட ஏனைய சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை (10) பிடியாணை பிறப்பித்திருந்தது.
இதனையடுத்து, ஹிருணிகா பிரேமச்சந்திர இது தொடர்பில் நீதிமன்றில் மனு தாக்கல் செய்ததையடுத்து, பிடியாணை உத்தரவை மீள பெற்றுக்கொள்வதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



