கம்பஹா , திவுலப்பிட்டி நகரத்தில் இரண்டு வலம்புரி சங்குகளுடன் சந்தேக நபரொருவர் நேற்று திங்கட்கிழமை (20) காலை கைது செய்யப்பட்டுள்ளதாக திவுலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
திவுலப்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொஸ்ஹின்ன பிரதேசத்தில் வசிக்கும் 35 வயதுடையவர் ஆவார்.
சந்தேக நபரிடமிருந்து 08 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான இரண்டு வலம்புரி சங்குகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திவுலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





