இலங்கை மற்றும் மாலைதீவிற்கான IOM நிறுவனத்தின் பிரதானியாக அண்மையில் பதவியேற்ற திருமதி.கிறிஸ்ரின் பாகோ முதற்தடவையாக யாழ்ப்பாணம் வருகை தந்துள்ளார். இந் நிலையில் அவர் இன்று வியாழக்கிழமை (30.01.2025) பிற்பகல் மரியாதை நிமித்தமாக யாழ்.மாவட்டப் பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனை யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இந்தச் சந்திப்பின் போது அவர் யாழ்.மாவட்டத்தின் தேவைப்பாடுகள் தொடர்பாகவும் அவர் கேட்டறிந்து கொண்டார்.






