அமைச்சர் சரோஜாவுக்கும் அமெரிக்க தூதருக்குமிடையில் சந்திப்பு

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர்  ஜூலி சங்கிற்கும் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் ஆகியோருக்கிடையில் நேற்று செவ்வாய்க்கிழமை (28) சந்திப்பொன்று இடம்பெற்றது.

பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகார பிரதி அமைச்சர் கலாநிதி நாமல் சுதர்சன இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டார்.

இலங்கையில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களை நிவர்த்தி செய்வதில் இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து இந்த சந்திப்பின் போது கவனம் செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.