அஹுங்கல்ல கடலில் மூழ்கி உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த இரண்டு வெளிநாட்டுப் பிரஜைகள் அஹுங்கல்ல பொலிஸ் உயிர்காப்பு பிரிவினரால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று புதன்கிழமை (22) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 58 வயதுடைய பெண்ணும் 59 வயதுடைய ஆணுமே காப்பாற்றப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டுப் பிரஜைகள் இருவரும் நேற்றைய தினம் பிற்பகல் அஹுங்கல்ல கடலில் நீராடிக் கொண்டிருந்துள்ள நிலையில் திடீரென கடலில் மூழ்கியுள்ளனர்.
இதன்போது அங்கு கடமையில் இருந்த பொலிஸ் உயிர்காப்பு பிரிவினர் வெளிநாட்டுப் பிரஜைகள் இருவரையும் காப்பாற்றி கரைக்குக் கொண்டு சென்று அவர்களுக்கு முதலுதவி அளித்துள்ளனர்.




