இந்தியாவின் 76ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு விசேட நிகழ்வுகள் ஏற்பாடு

இந்தியாவின் 76ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு நாளை ஞாயிற்றுக்கிழமை (26)  கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரலாயத்தில் விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அதற்கமைய நாளை  ஞாயிற்றுக்கிழமை (26) காலை 8.30க்கு கொழும்பு 3இல் அமைந்துள்ள இந்திய இல்லத்தில் கொடியேற்றம் மற்றும் கலை கலாசார நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

அத்தோடு இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவின் குடியரசு தின செய்தியும் வாசிக்கப்படவுள்ளது.

இதேவேளை, யாழ்ப்பாணம் மற்றும் கண்டியிலுள்ள துணை உயர்ஸ்தானிகராலயங்களிலும் இந்நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.