கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹூலுதாகொட பாலத்திற்கு அருகில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று (30) வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கல்கிஸ்ஸை பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த அரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கல்கிஸ்ஸை பகுதியைச் சேர்ந்த 53 வயதுடையவர் ஆவார்.
சந்தேக நபரிடம் இருந்து 05 கிராம் 700 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





