களுத்துறையில் சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது !

களுத்துறை, அலுபோமுல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அருக்கொடை பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேக நபர் ஒருவர் அலுபோமுல்ல பொலிஸாரால் நேற்று புதன்கிழமை (15) கைது செய்யப்பட்டுள்ளார்.

பதில் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரையின் பேரில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அருக்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதுடையவர் ஆவார்.

சந்தேக நபரிடம் இருந்து, 52 லீற்றர் 500 மில்லி லீற்றர் (70 போத்தல்கள்) சட்டவிரோத மதுபானம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அலுபோமுல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.