கொழும்பு – மட்டக்களப்பு பிரதான வீதியில் விபத்து ; ஒருவர் பலி

பின்னவலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொழும்பு – மட்டக்களப்பு பிரதான வீதியில் அமுபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பின்னவலை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (12) இரவு இடம்பெற்றுள்ளது.

சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி அருகிலிருந்த கொங்கிரீட் தூண் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்து டிப்பர் வாகனத்தின் சாரதி பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் பெலிஹுலோயா பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடையவர் ஆவார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பின்னவலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.