சாவகச்சேரியில் மாபெரும் இரத்ததான முகாம் நிகழ்வு

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் முதன்முறையாக இரத்தவங்கிப் பிரிவுடன் விதையனைத்தும் விருட்சமே குழுமம் இணைந்து தென்மராட்சிப் பொது அமைப்புக்களின் அனுசரணையுடன் நடாத்தும் மாபெரும் இரத்ததான முகாம் நாளை ஞாயிற்றுக்கிழமை( 19. 01. 2025) காலை-08.30 மணி முதல் பிற்பகல்-02.30 மணி வரை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் இடம்பெறவுள்ளது.
 
இந் நிகழ்வில் அனைவரையும் தவறாது கலந்து கொள்ளுமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளனர்.