சிரமதானத்தின்போது மண்வெட்டியால் தாக்கி ஒருவர் கொலை

இரத்தினபுரி மாவட்டம் பொல்பொக்க – ஹல்லின்ன வீதியில் வீதியில் இரண்டு நபர்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் மண்வெட்டியால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஒபநாயக்க பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த கொலை சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.

கொலை செய்யப்பட்டவர் ஹல்லின்ன பகுதியைச் சேர்ந்த 49 வயதுடையவர் ஆவார்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

பொல்பொக்க – ஹல்லின்ன வீதியில் வீதியில் நடைபெற்ற சிரமதானத்தில் ஈடுபட்டிருந்த இரண்டு நபர்களுக்கு இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.

தகராறில் சந்தேக நபர் மற்றைய நபரை மண்வெட்டியால் தாக்கி கொலை செய்துள்ளார்.

இதனையடுத்து, 66 வயதுடைய சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஒபநாயக்க பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.