மாத்தளை, நாவுல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வராகொல்ல பகுதியில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று வியாழக்கிழமை (30) கைது செய்யப்பட்டுள்ளதாக நாவுல பொலிஸார் தெரிவித்தனர்.
நாவுல பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கோன்கஹவெல பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவர் ஆவார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நாவுல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





