பொல்பிதிகமவில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது !

குருணாகல், பொல்பிதிகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உல்பாத பிரதேசத்தில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று திங்கட்கிழமை (20) கைது செய்யப்பட்டுள்ளதாக பொல்பிதிகம பொலிஸார் தெரிவித்தனர்.

பொல்பிதிகம பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பல்லேகெலே பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடையவர் ஆவார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொல்பிதிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.