மகிந்தவிற்கு வசிப்பதற்கு வீடில்லை என்றால் வீடொன்றை வழங்க அரசாங்கம் தயார்

முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ச வசிப்பதற்கு வீடு இல்லை என்றால் அவருக்கு வீடொன்றை வழங்குவதற்கு அரசாங்கம் யார் என ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க தெரிவித்துள்ளார்.

தம்புத்தேகமவில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ள ஜனாதிபதி நானும் அமைச்சர்களும் மாளிகைகளில் வசிக்க ஆரம்பிக்கவில்லை முன்னாள் ஜனாதிபதியால் ஏன் அதனை செய்ய முடியாது என கேள்விஎழுப்பியுள்ளார்.

பொதுமக்களின் வரிப்பணத்தில் மாளிகைகளில் வசிப்பது நியாயமான விடயம் இல்லை,நாங்கள் எவரையும் பழிவாங்கவில்லை என தெரிவித்துள்ள ஜனாதிபதி நாங்கள் நாட்டை புதியதிசையில் இட்டுச்செல்கின்றோம்,வெளியேறுங்கள் என நாங்கள் வேண்டுகோள் விடுப்பதற்கு முன்னர் அவர்கள் வெளியேறவேண்டும் என தெரிவித்துள்ளார்.

மாறுங்கள் என நாங்கள் அவர்களை கேட்டுகின்றோம் மக்களின் வரிப்பணத்தை செலவிடுவதற்கு முன்னர் இரண்டுதடவை யோசிக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.