கச்சதீவுப் புனித அந்தோனியார் ஆலய வருடாந்தத் திருவிழா எதிர்வரும் மார்ச் மாதம்-14 மற்றும் 15 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக யாழ்.மறைமாவட்டக் குருமுதல்வர் அருட்தந்தை ப.யோ.ஜெபரட்ணம் அடிகளார் தெரிவித்துள்ளார்.
இன்று செவ்வாய்க்கிழமை (28.01.2025) அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மற்றும் இந்தியா இடையேயான உறவுப்பாலமாகக் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் திருவிழா காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.



