மினுவாங்கொடையில் துப்பாக்கிச் சூடு ; ஒருவர் பலி

கம்பஹா, மினுவாங்கொடை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றிற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார்  தெரிவித்தனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (07) இடம்பெற்றுள்ளது.

35 வயதுடைய நபரொருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார்  தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத இருவரால் இந்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார்  மேலும் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.