யாழில் தேசிய மக்கள் சக்தியின் மக்கள் தொடர்பாடல் அலுவலகம் திறந்து வைப்பு!

தேசிய மக்கள் சக்தியின் மேலும் ஒரு பொது மக்கள் தொடர்பாடல் அலுவலகம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (02)  யாழ்ப்பாணம் கோப்பாய் வீதியில் திறந்து வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கருணைநாதன் இளங்குமரன், எஸ்.ஸ்ரீ. பவானந்தராஜா, ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன், கட்சி உறுப்பினர்கள், செயற்பாட்டாளர்கள், ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

மக்களின் நலன் கருதி அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் முகமாக இந்த அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.