யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தைப்பொங்கல் விழா

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைச் சமூகத்தின் ஏற்பாட்டில் செவ்வாய்க்கிழமை (14.01.2025) காலை வைத்தியசாலை முன்றலில் தைப்பொங்கல் விழா சிறப்பாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி த.சத்தியமூர்த்தி தலைமையில் இடம்பெற்றது.
குறித்த தைப்பொங்கல் விழாவில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.