வவுனியா – தோனிக்கல் பகுதியில் கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் கைது

வவுனியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தோனிக்கல் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (09) பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் கேரள கஞ்சாவுடன் முச்சக்கரவண்டியில் பயணித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் வவுனியா பகுதியைச் சேர்ந்த 23 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரிடமிருந்து 02 கிலோ 100 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும், குறித்த சம்பவம் தொடர்பில்  வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.