கொழும்பு, வெள்ளவத்தை ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலில் மோதி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை (13) காலை இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் மாத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய பெண்ணொருவர் ஆவார்.
இவர் மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ரயிலில் மோதியே உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெள்ளவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



