நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டியவின் பிணை மனு மீதான உத்தரவை ஒத்திவைக்க உயர் நீதிமன்றம் இன்று புதன்கிழமை (28) தீர்மானித்துள்ளது.
இந்த வழக்கு எதிர்வரும் மே மாதம் 08 ஆம் திகதி மீண்டும் அழைக்கப்படும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஹர்ஷ இலுக்பிட்டிய சார்பில் நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணி முன்வைத்த கோரிக்கையைப் பரிசீலித்த நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய இணையவழி விசா முறைமையை இடைநிறுத்தி வைக்குமாறு உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்தாமல் நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





