ஐஸ் போதைப்பொருளுடன் காவல் துறை கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கல்நெவ பொலிஸார் தெரிவித்தனர்.
கல்நெவ பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இபலோகம பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 42 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரான பொலிஸ் கான்ஸ்டபிள் போதைப்பொருட்களுக்கு அடிமையானவர் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் கல்நெவ மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இருந்து வாட்ஸ்அப் ஊடாக போதைப்பொருட்களை கொள்வனவு செய்வதாக பொலிஸ் விசாரணைகளில் மேலும் தெரியவந்துள்ளது.