செம்மணியில் வரலாற்று சாதனை படைத்த நீதிபதி இளஞ்செழியன்

இலங்கையின் அரசியல் சட்டத்திற்குள் தமிழ் மக்களுக்கான உச்சப்பட்ச நீதி கிடைக்க வேண்டியதற்காக நீதிபதி இளஞ்செழியன் போராடியவர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என்று பிரித்தானியாவிலுள்ள அரசியல் ஆய்வாளர் திபாகரன் தெரிவித்தார்.

ஊடக  நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

“ஆனாலும் அவர்களை கட்டுப்படுத்தக்கூடிய நீதித்துறை சார்ந்த வரையறைகள் மற்றும் அரசியல் தலையீடுகளும் காணப்படுகின்றன.

இவ்வாறான அழுத்தங்களும் இருந்தாலும் நீதிபதி இளஞ்செழியன் எல்லாவற்றையும் எதிர்த்து தமிழ் மக்களுக்காக இருந்தார் என்பதை மறுக்க முடியாது” என குறிப்பிட்டார்.