அக்மீமன பகுதியில் துப்பாக்கிச் சூடு

காலி, அக்மீமன, வெவேகொடவத்த பகுதியில் இன்று திங்கட்கிழமை (23) துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் இன்று அதிகாலை வீடொன்றின் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொண்டு  தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டில் ஒருவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வீட்டின் உரிமையாளர் மிதிகம பகுதியில் உள்ள தொழிற்சாலையில் நிர்வாகியாகப் பணியாற்றி வருவதுடன், மேலும் சில நாட்களுக்கு முன்பு ஓர் ஊழியருடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அவர் வேலையிலிருந்து நீக்கப்பட்டார்.

அந்த ஊழியர் முன்னர் தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு அவரை அச்சுறுத்தியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அதன்படி, துப்பாக்கிச் சூட்டை அந்த நபர் நடத்தியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.