அநுராதபுரத்தில் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் ஒருவரை 682 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் வட மத்திய மாகாண குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.
புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, அநுராதபுரம் பொலிஸ் பிரிவின் புபுதுபுர பகுதியில் நேற்று (8) நடத்திய சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவ்வேளை, சந்தேக நபர் வைத்திருந்த 682 கிராம் ஹெரோயின் போதைப்பொருள், போதைப்பொருள் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர் 26 வயதுடைய, அநுராதபுரம் கல்குளம் பகுதியை வசிப்பிடமாகக் கொண்டவர் என ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் வடமத்திய மாகாண குற்றப்புலனாய்வுப் பிரிவு பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
விசாரணைகளின் பின்னர், சந்தேக நபர் அநுராதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.




