கொட்டாவை பிரதான பேருந்து நிலையத்தில் தனியே தவித்த எட்டு வயது சிறுவன் புதன்கிழமை (03) அதிகாலையில் பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளார்.
பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் பற்றிய எந்த தகவலும் சிறுவனால் சரியாக வழங்க முடியவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில், பொலிஸ் அதிகாரிகளால் சிறுவனால் உணவு உட்பட பராமரிப்பு மற்றும் கவனிப்பு வழங்கப்பட்டது.
சிறுவனை ஹோமாகம நீதவான் முன் ஆஜர்படுத்தி, நீதிமன்ற உத்தரவின் பேரில் அடுத்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.




