ஜெருசலமில் இன்று (8) காலை நடந்த துப்பாக்கிச் சூட்டில் சுமார் நால்வர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்ததாகவும் இஸ்ரேலிய அவசர சேவைகள் தெரிவித்துள்ளன.
உயிரிழந்தவர்களில் 50 வயதுடைய ஒருவரும், 30 வயதுடைய மூன்று ஆண்களும் அடங்குவர் என இஸ்ரேலின் அவசரகால மீட்பு சேவை தெரிவித்துள்ளது.
துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான மேலும் ஐந்து பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் சுமார் 15 பேர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இன்று காலை பெரிய நெடுஞ்சாலையொன்றில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேலிய காவல்துறையின் செய்தியாளர் “இரண்டு பயங்கரவாதிகள் அழிக்கப்பட்டனர்” என குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், நிலைமை இன்னும் தொடர்வதாகவும் கூறியுள்ளார்.
துப்பாக்கிச் சூடு குறித்து அந்நாட்டு அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.





