“டுபாய் சுத்தா”வின் வழிகாட்டுதலில் முச்சக்கரவண்டிகளை திருடி பாதாள உலக கும்பல்களுக்கு கொடுத்தவர் கைது!

பல்வேறு பிரதேசங்களில் முச்சக்கரவண்டிகளை திருடி குற்றச் செயல்களுக்கு பயன்படுத்துவதற்காக பாதாள உலக கும்பல்களுக்கு கொடுத்ததாக கூறப்படும் சந்தேக நபர் ஒருவர் பாணந்துறை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பாணந்துறை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் களுத்துறை – பாணந்துறை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்நிவளைப்பில் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பல்வேறு பிரதேசங்களில் வைத்து திருடப்பட்டதாக கூறப்படும் 4 முச்சக்கரவண்டிகளும் சந்தேக நபரிடமிருந்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர், பாதாள உலக கும்பலைச் சேர்ந்தவரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான “குடு சலிந்து” என்பவருடன் நெருங்கிய தொடர்புகளை பேணி வரும் பாதாள உலக கும்பலைச் சேர்ந்தவரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான “டுபாய் சுத்தா” என அழைக்கப்படும் பிரகாஷ் சதுரங்க  கோதாகொட என்பவரின் வழிகாட்டுதலின் கீழ் முச்சக்கரவண்டிகளை திருடி பாதாள உலக கும்பல்களுக்கு கொடுத்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பாணந்துறை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.