தியாகதீபம் திலீபனின் 38 ஆவது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டுத் திலீபனின் வரலாற்றினை அடுத்த சந்ததியினருக்குக் கடத்தும் முகமாக அவரின் வரலாற்றினை எடுத்தியம்பும் பார்த்தீபன் திலீபனாக! திலீபன் தியாக தீபமாக!! எனும் தொனிப்பொருளுடனான ஆவணக் காட்சியகம் இன்று சனிக்கிழமை (20.09.2025) மாலை-06.30 மணியளவில் நல்லூரிலுள்ள தியாகதீபம் திலீபன் நினைவுத் தூபிக்கு முன்பாக மாவீரர்களின் பெற்றோர்கள், முன்னாள் போராளிகளின் பங்கேற்புடன் திறந்து வைக்கப்படவுள்ளது.
குறித்த நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டுக் குழுவினர் கேட்டுள்ளனர்.





