கம்பஹாவில் பேலியகொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வெதமுல்ல பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இளைஞன் ஒருவர் பேலியகொடை பொலிஸாரால் நேற்று புதன்கிழமை (20) அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்த கொலை சம்பவம் கடந்த 19 ஆம் திகதி மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொலை செய்யப்பட்டவர் களனி, வெதமுல்ல பகுதியைச் சேர்ந்த 46 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பில் பேலியகொடை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே சந்தேக நபரான இளைஞன் நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட இளைஞன் களனி, வெதமுல்ல பிரதேசத்தில் வசிக்கும் 24 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பேலியகொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




