சிரிய தலைநகருக்கு வெளியே உள்ள பகுதியொன்றில் தற்போது கைவிடப்பட்ட நிலையில் உள்ள உருளைகிழங்கு தொழிற்சாலை ஆட்சியிலிருந்து நீக்கப்பட்ட பசார்அல் அசாத்தின் இரகசியங்கள் பலவற்றை அம்பலப்படுத்துகின்றது.
இது குறித்து சிபிஎஸ்நியுஸ் தெரிவித்துள்ளதாவது
சிரிய தலைநகர் டமஸ்கஸின் வெளியே உள்ள புறநகர் பகுதியில் கைவிடப்பட்ட உருளைக்கிழங்கு தொழிற்சாலையை எமது செய்தியாளர்கள் குழுவினர் பார்வையிட்டனர்.
இந்த பகுதியில் உள்ள அறையொன்றில் ஹைடிரோலிக் அசிட் பெருமளவில் சேமித்து வைக்கப்பட்டிருந்ததை எங்கள் செய்தியாளர்கள் பார்வையிட்டனர்
இது மத்திய கிழக்கின் வீதிகளில் அதிகமாக பயன்படுத்தப்படும்கப்டகொன் என்ற போதைப்பொருளை உற்பத்தி செய்வதற்கு பயன்படுத்தப்படுகின்றது.
கிளர்ச்சிக்காரர்கள் சிரிய தலைநகரை கைப்பற்றிய ஒரு சில நாட்களில் இந்த இரசாயன பொருளை கண்டுபிடித்தனர் என கிளர்ச்சிக்குழுவை சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
கப்டகொன் என்பது ஏழைகளின் போதைப்பொருள் என வர்ணிக்கப்படுகின்றது – அதிக போதைதன்மை கொண்டது.

இந்த போதைப்பொருளிற்கு அடிமையானவர்களை நினைத்து கவலைப்படுகின்றோம்இஎன தெரிவித்த அஹமட் அபு யகின் அசாத் அரசாங்கம் ஒரு தலைமுறையையே அழித்துள்ளது அவர்கள் அது குறித்து கவலைப்டவில்லை பணம் குறித்தே கவலைப்பட்டார்கள் என தெரிவித்துள்ளார்.
இந்த போதைப்பொருள் உற்பத்தி வியாபாரம் மூலம் அசாத் அரசாங்கம் உழைத்ததாக ஆய்வாளர்கள் தெரிவிக்கும் எண்ணிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றது.
அசாத் அரசாங்கம் இந்த போதைப்பொருள் மூலம் வருடாந்தம் ஐந்து பில்லியன் டொலர்களை உழைத்தது இந்த பணமே வங்குரோத்து நிலையில் காணப்பட்ட அந்த அரசாங்கத்தின் உயிர்நாடியாக காணப்பட்டது என தெரிவிக்கும் ஆய்வாளர்கள் இந்த போதைப்பொருளை தயாரிப்பதற்கு அதிக பணம் தேவையில்லை ஆனால் ஒரு குளிசையை 20 டொலருக்கு விற்கலாம் என தெரிவித்துள்ளனர்.
கைவிடப்பட்ட தொழிற்சாலையில் மீட்கப்பட்ட பொருட்கள் பல மில்லியன் டொலர்கள் பெறுமதியானவை.
பசார் அல் அசாத் அரசாங்கமே மத்திய கிழக்கின் மிகப்பெரிய போதைப்பொருள் விநியோகத்தை முன்னெடுக்கின்றது என அயல்நாடுகள் குற்றம்சாட்டி வந்தமை குறிப்பிடத்தக்கது
இது தொடர்பில் 2023 மார்ச்சில் அசாத்நெருங்கிய உறவினர்கள் உட்பட பலருக்கு எதிராக அமெரிக்கா தடைகளை விதித்திருந்தது.
அதிகளவு போதைதன்மை கொண்ட கப்டகனை உற்பத்தி செய்யும் பிரதான நாடு சிரியா என அவ்வேளை தெரிவித்திருந்த அமெரிக்க அதிகாரியொருவர் லெபனான் ஊடாக இது கொண்டு செல்லப்படுவதாக குறிப்பிட்டிருந்தார்.





