மாத்தறையில் நீர்நிலையிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு!

மாத்தறை பறவைகள் சரணாலயத்திற்கு செல்லும் பாலத்திற்கு அடியில் உள்ள நீர்நிலையிலிருந்து நேற்று வெள்ளிக்கிழமை (11) இரவு பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மாத்தறை பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்ட பெண் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

5 அடி உயரமுடைய 40 முதல் 45 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.