முச்சக்கரவண்டி மற்றும் எரிபொருள் பவுசர் மோதி விபத்து : சிறுவன் காயம்

முச்சக்கர வண்டி ஒன்றின் மீது திரவ எரிபொருள் எடுத்துச் செல்லும் கொல்கலன் ஒன்று (பவுசர் ஒன்று)  மோதியதில் முச்சக்கரவண்டி  பலத்த சேதம் அடைந்ததுடன் அதில் பயணித்த சிறுவன்  ஒருவன் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

கொலன்னாவயில்  இருந்து கொட்டகல  பிரதேசத்திற்கு எரிபொருளுடன் சென்ற பவுசர் வண்டி ஒன்று வட்டவலைப் பிரதேசத்தில்  வைத்து மோதியுள்ளது.

மேற்படி சம்பவத்தின் போது பவுசர் வண்டியை வலைவு ஒன்றில்  திருப்பும் போது பவுஸர் வண்டியின் பின்புறமாக முச்சக்கர வண்டி மோதியுள்ளது.

தனது தாயுடன் முச்சக்கர வண்டியில் பயணித்த சிறுவனே காயமடைந்துள்ளதாகத் தெரிய வருகிறது. இவர்கள் செனன் என்ற இடத்தில் இருந்து  முச்சக்கரவண்டியில்  பயணித்துள்ளனர். ஹட்டன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.