400 வருடங்கள் பழமைவாய்ந்த வட்டுக்கோட்டை துணைவி ஆலயத்தினை மீள் உருவாக்கும் பணிகள் ஆரம்பம்

வட்டுக்கோட்டை துணைவி ஆலயத்தினை மீள் உருவாக்கம் செய்யும் பணிகள் இன்று வெள்ளிக்கிழமை (07.02.2025) ஆரம்பித்து வைக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் தலைவர் வாழ்நாள் பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் தலைமையில் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்ட நிலையில் நேற்றுப் பணிகள் ஆரம்பமானது.

மிகத் தொன்மை வாய்ந்த எமது முன்னோர்களின் வழிபாட்டுத் தலமான இவ்வாலயம் பல ஆண்டு காலம் கவனிப்பார் இன்றிக் காணப்பட்ட நிலையில் அதனை மீள்உருவாக்கம் செய்வதற்கு நீண்ட காலம் முயற்சி எடுக்கப்பட்டது. இந் நிலையில் தற்போது அமெரிக்காவில் வசிக்கின்ற கைதடியைச் சேர்ந்த கலாநிதி. சிவயோகநாதனின் மகள் பாலயோகஸ்தினி சிவயோகநாதன் இவ் ஆலயத்தினைப் பழைய நிலைக்கு மீள் உருவாக்கம் செய்வதற்குரிய நிதி உதவியினை வழங்கியுள்ளார்.