இளவாலையில் வாலிபத் தீபாவளிக் கொண்டாட்டம்

இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் 11 ஆவது ஆண்டு நிறைவு விழாவும் வாலிபத் தீபாவளிக் கொண்டாட்டமும் தீபாவளித் திருநாளான  நாளை வியாழக்கிழமை (31.10.2024) மாலை-05 மணி முதல் இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியில் இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் தலைவர் நா.சுகந்தன் தலைமையில் இடம்பெறவுள்ளது.

நிகழ்வில் கலை- கலாசார நிகழ்வுகள், நடன நிகழ்வுகள், பிரபல மாயாஜால வித்தகரின் மாயாஜால வித்தைகளின் காட்சி, இலங்கையின் பல பாகங்களிலிருந்து இணையும் முன்னணிக் கலைஞர்களின் கலக்கலான இசை நிகழ்ச்சி, வான வேடிக்கைகள் மற்றும் கலை நிகழ்வுகள்  நடைபெறவுள்ளதாக நிகழ்வின் ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.