செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் தொடர்பில் உத்தியோகத்தர்களுக்குச் செயலமர்வு

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் தொடர்பாக உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வு-2025 இன்று திங்கட்கிழமை (17.03.2025) காலை- 09.30 மணி முதல் பிற்பகல்- 12.30 மணி வரை யாழ்.மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் யாழ்.மாவட்டப் பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நடைபெற்றது.

இந்தச் செயலமர்வில் உத்தியோகத்தர்களுக்குச் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் என்றால் என்ன? என்பது தொடர்பிலும், அதன் முக்கியத்துவம் மற்றும்  அரச அலுவலகங்களில் அதன் தேவைப்பாடு மற்றும் பயன்பாடுகள் தொடர்பிலும் விளக்கமளிக்கப்பட்டது.