துபாயில் தலைமறைவாக உள்ள பிரபல போதைப்பொருள் கடத்தல் காரரான “மஹவத்த சாமர“ என்பவருக்குச் சொந்தமான போதைப்பொருள் மற்றும் பணம் என்பன பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் கம்பஹா, பூகொடை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே இந்த பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
3 கிலோ 500 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 11 மில்லியன் ரூபா பெறுமதியான பணம் உள்ளிட்ட பொருட்களே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது.




