வடலியடைப்பில் நாடக விழா

அண்மையில் மறைந்த ஈழத்து தமிழ் நாடகத் துறையின் பிதாமகன் குழந்தை ம.சண்முகலிங்கத்தின் நினைவாகச் சண்டிலிப்பாய்க் கலாசார மத்திய நிலையம் நடாத்தும் நாடக விழா திங்கட்கிழமை (31.03.2025) மாலை-03 மணியளவில் வடலியடைப்பு ஐயனார் கோவிலடியில் அமைந்துள்ள சண்டிலிப்பாய்க் கலாசார மத்திய நிலைய மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இந் நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர் க.ரதிதரன் நினைவுரை ஆற்றுவார். அதனைத் தொடர்ந்து நாடகங்கள், சிறுவர் நாடகங்கள், நகைச்சுவை நாடகம், வார்த்தைகளற்ற நடன நாடகம் ஆகிய நாடகங்களும், ரவர் அரங்க மண்டப முதலாம் வருட மாணவர்களின் வசந்தன் கூத்தும் மேடையேற்றப்படவுள்ளன.