அதிகாரம் இல்லாத
ஆனால் அடங்காத குரல் ஒன்று,
பதவி இல்லாத
ஆனால் பாரம் சுமந்த மனம் ஒன்று
அதுவே குமார் பொன்னம்பலம்.
நாடாளுமன்றம் காணாத பாதையில்
நியாயம் தேடிய பயணி,
மேடை அல்லாத இடங்களிலும்
உண்மை சொன்ன துணிவு.
இனம் ஒடுக்கப்பட்ட வேளைகளில்
எழுத்தாய், சொல்லாய், சிந்தனையாய்
அவர் நின்றார்
சுயமரியாதையின் காவலனாய்.
தந்தையின் கொள்கை தீபம்
அணையாமல் காத்த கரம்,
அதை மகனின் கைகளில்
அமைதியாக ஒப்படைத்த பயணம்.
நினைவுநாளில் நாம் வணங்குவது
ஒரு பெயரை அல்ல,
ஒரு நேர்மையான அரசியல் மனசாட்சியை.
மாமனிதர் குமார் பொன்னம்பலம் 2000 ஆண்டு ஜனவரி 5 ஆம் திகதி கொழும்பில் படுகொலை செய்யப்பட்டார்.




