ஒரு கடல்
உறங்கச் செல்லும் நேரம்
அலைகள் ஓடிவந்து
கரையின் கையைப் பிடிக்கின்றன.
சமுத்திரத்தில்
பூத்துக் கிடந்தவள் மீது
படர்கிறது தீச்சர்ப்பம்.
சூரியன் உதிர்ந்த பொழுதில்,
தண்ணீரின் தோழியை
விழுங்குகிறது கண்ணீர்.
ஒரு
தொட்டி மீனாய்
வாழச் சகிக்காதவள்
மரணத்தை
சுழியோடிக்கொண்டு போகிறாள்.
கரை நீளமெங்கும் எதிரொலிக்கிறது
அவள் பாடும்
நீலத்தின் மொழி.
– தீபிகா-
23.12.2025
02.47 Pm.





