கார்த்திகை மலர்ந்த
ஆயுத வரலாற்றின் நிழலில்,
ஈழத் தமிழர்
உயிர் கொடுத்து எழுதிய
ஒரு போர்கால அத்தியாயம்.
அவன் துப்பாக்கியால்
இனத்தை காத்தான்;
அடக்குமுறைக்கு
அச்சம் கற்றுக் கொடுத்தான்.
அதே வரலாற்றின் தொடர்ச்சியில்,
தை மாதத்தில்
ஒரு அரசியல் சிந்தனை
உடலெடுத்து நிற்கிறது.
நீர்
வாக்குச் சாவடிகளின்
சதிப் பாதைகளில்,
அரங்குகளின் பொய் மொழிகளில்,
அதிகாரத்தின் முகமூடிகளை
கிழித்தெறியும் குரல்.
பேரம் பேசும் அரசியலுக்கும்
பயமுறுத்தும் அதிகாரத்துக்கும்
தலைவணங்காத
தைப் பிறந்த நிலைப்பாடு நீர்.
ஒரு காலம் ஆயுதம் சொன்னதை
இன்று அரசியல் சொல்கிறது;
அந்த அரசியலின்
கூர்மை நீர்,
அந்த தொடர்ச்சியின்
உறுதி நீர்.
தை மாதப் பிறந்த நாள்
வாழ்த்து மட்டும் அல்ல
இனத்தின் அரசியல் உறுதியை
மீண்டும் அறிவிக்கும் நாள்.
அடங்காத நினைவுகளோடு,
மாறாத நிலைப்பாட்டோடு,
ஈழத் தமிழரின்
உரிமைக் குரலாய்
வரலாற்றில் நீங்கா தடம் பதிய
உம் பயணம் தொடரட்டும்.
பிறந்த நாள் வாழ்த்துகள்!





