9 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகையை கொள்ளையிட்டவர் கைது!

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வீடு ஒன்றில் சுமார் ஒன்பது இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியாக தங்க நகையினை கொள்ளையிட்டுச் சென்ற சந்தேக நபர் ஒருவர் ஹட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டன் பொலிஸ் நிலைய பிரதம பொலிஸ் பரிசோதகர் சுகததாசவுக்கு கிடைத்த இரகசிய தகவலினையடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது கொள்ளையிடப்பட்ட 9 இலட்சத்து 62 ஆயிரத்து 500 ரூபா பெறுமதியான தங்க நகையும் மீட்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் ஹட்டன் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட யுலிபீலட் தோட்டத்தைச் சேர்ந்த 36 வயது மதிக்கதக்கவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை தொடர்ந்து அவரை ஒரு இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுவிக்க நீதவான் உத்தரவிட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் தொடபான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்