கிளிநொச்சி மாணவன் அகில இலங்கை ரீதியாக கணிதபிரிவில் முதலிடம் பெற்று சாதனை. கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த திறமையான மாணவன் ஒருவர், 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர உயர்தர (G.C.E Advanced Level) பரீட்சையில் அகில இலங்கை அளவில் முதலிடம் பெற்று வரலாற்றுச் சாதனையைப் பதிவு செய்துள்ளார்.

பரிப்சைகள் திணைக்களம் வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ பெறுபேறுகளின்படி, கிளிநொச்சியைச் சேர்ந்த தெய்வேந்திரன் திருக்குமரன் என்பவர் கணிதப்பிரிவில் பரிட்சைக்கு தோற்றக, தீவு முழுவதிலும் (Island Rank) முதலிடத்தைப் பெற்றுள்ளார். இவர் 2.9400 என்ற மிக உயர்ந்த Z-Score மதிப்பெண்ணைப் பெற்றள்ளார்.

பாடவாரியான பெறுபேறுகளில், இயற்பியல் (Physics), இரசாயனவியல் (Chemistry), மற்றும் இணைந்த கணிதம் (Combined Mathematics) ஆகிய மூன்று பிரதான பாடங்களிலும் A தரத்தைப் பெற்றுள்ளார். மேலும், பொதுத் தேர்வில் (Common General Test) 80 மதிப்பெண்களையும், பொதுப் ஆங்கிலத்தில் (General English) B தரத்தையும் பெற்றுள்ளார்.





