கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தை எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் அலுவலகத்துக்கு 4 ஊழியர்களை நியமித்து, அவர்களைத் தனது தனிப்பட்ட பணிகளில் ஈடுபடுத்திய குற்றச்சாட்டின் கீழ் இவர் இன்று (5) கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதன்போதே அவருக்கு நீதிமன்றம் விளக்கமறியல் உத்தரவினை பிறப்பித்துள்ளது.






