அச்சுவேலியில் மீண்டும் அதிகூடிய மழைவீழ்ச்சி!

செவ்வாய்க்கிழமை (18.11.2025) காலை-08.30 மணி தொடக்கம் புதன்கிழமை (19.11.2025) காலை-08.30 மணி வரையான 24 மணித்தியாலத்தில் யாழ். மாவட்டத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சி அச்சுவேலியில் பதிவாகியுள்ளது. இக் காலப் பகுதியில் அச்சுவேலியில் 58.3 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாகத் திருநெல்வேலி வானிலை அவதான நிலையத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, கடந்த சில தினங்களுக்கு முன்னர் 24 மணித்தியால நிலவரப்படி இலங்கை முழுவதும் அதிகூடிய மழைவீழ்ச்சி அச்சுவேலியில் பதிவாகியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.