அமெரிக்க நீதித் திணைக்களத்தினால் இலங்கை சட்டத்தரணிகளுக்கு விசேட பயிற்சித் திட்டம்!

அமெரிக்க நீதித் திணைக்களத்தினால் 500க்கும் மேற்பட்ட இலங்கை சட்டத்தரணிகளுக்கு விசேட பயிற்றி திட்டம் ஒன்று அண்மையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தில் இந்த பயிற்றி திட்டம்  முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் தலைமையில் அமெரிக்க நீதித் திணைக்களத்தினால் இந்த பயிற்றி திட்டம்  முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த பயிற்றி திட்டத்தின் போது நீதிமன்ற விசாரணைப் பிரதிநிதித்துவம் மற்றும் குற்றவியல் சட்டத்தில் சிறந்த நடைமுறைகள் தொடர்பில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க – இலங்கை சட்ட ஒத்துழைப்பானது, அமெரிக்காவினதும் இலங்கையினதும் பாதுகாப்பு மற்றும் பொருளாதார செழிப்பை அச்சுறுத்தும் நாடுகடந்த குற்றச்செயல்கள் மற்றும் குற்றவியல் வலையமைப்புகளை இலக்கு வைப்பதற்கு உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.