இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – ஒருவர் உயிரிழப்பு

அநுராதபுரம் பரசன்கஸ்வெவ பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பரசன்கஸ்வெவ பொலிஸார் தெரிவித்தனர்.

பரசன்கஸ்வெவ பொலிஸ் பிரிவின் ரத்மல மெதகம வீதியில் செவ்வாய்க்கிழமை (31) மாலை இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

பரசன்கஸ்வெவ, அம்பகஸ்வெவ பகுதியை வசிப்பிடமாக கொண்ட 25 வயதுடைய இளைஞர் ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார் என்பது ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

பரசன்கஸ்வெவ பொலிஸ் பிரிவின் ரத்மலை-மெதகம வீதியில் மெதகம நோக்கிச் சென்று கொண்டிருந்த ஒரு மோட்டார் சைக்கிள், எதிர்த்திசையில் வந்துகொண்டிருந்த மற்றொரு மோட்டார் சைக்கிளுடன் மோதியது.

இந்த விபத்தில், மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரும், பின்னால் அமர்ந்து பயணித்த ஒருவரும் காயமடைந்தனர். அவர்களில் ஒருவர் பரசன்கஸ்வெவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஒருவர் உயிரிழந்தார்.

உயிரிழந்தவரின் சடலம் பரசன்கஸ்வெவ வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் பரசன்கஸ்வெவ பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.