இலங்கைக்கு சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை வழங்குவதற்கு ரஷ்யாவின் வலுசக்தி பிரதி அமைச்சர் றோமன் மார்ஷவின் உட்பட ரஷ்ய தூதுக்குழுவினர் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நாட்டுக்கு வருகைத் தந்துள்ள ரஷ்யாவின் வலுசக்தி பிரதி அமைச்சர் உட்பட தூதுக்குழுவினர் நேற்று வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி, தொழில் அமைச்சர் அனில் ஜயந்த மற்றும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இலங்கை மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான வலுசக்தி துறையின் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.மேலும்இ இலங்கை மற்றும் ரஷ்ய கூட்டமைப்பிற்கு இடையிலான நீண்டகால ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்தல்இகுறிப்பாக எரிபொருள் விநியோகம் வலுசக்தி பாதுகாப்பு மற்றும் நீண்டகாலப் பங்காளித்துவத்துக்கான புதிய வாய்ப்புகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்படப்பட்டது.
இதற்கமைய இலங்கைக்கு சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை வழங்குவதற்கு ரஷ்யாவின் வலுசக்தி பிரதி அமைச்சர் றோமன் மார்ஷவின் உட்பட ரஸ்ய தூதுக்குழுவினர் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
மத்திய கிழக்கு நாடுகளில் மோதல் நிலை தீவிரமடைந்த காரணத்தால் நாட்டுக்கு வருகைத்தரவிருந்த எரிபொருள் கப்பல்கள் தாமதமடைந்ததால் கடந்த வாரங்களில் எரிபொருள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டது.
எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வாக ரஸ்யாவிடமிருந்து ‘அரசாங்கம் -அரசாங்கம்| என்ற அடிப்படையில் எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் இராஜதந்திர மட்டத்தில் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டது.இதற்கமைவாகவே ரஷ்யாவின் வலுசக்தி பிரதி அமைச்சர் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வருகைத் தந்துள்ளார்.




